சிரித்திருக்க!

கோர்ட்டில் அந்த விவாகரத்து வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டது. பிரதிவாதியான மனைவி தன் கணவர் தன் மேல் அபாண்டமாகப் பழி போட்டு இந்த விவாகரத்தைக் கேட்டிருப்பதாக வாதாடியதைத் தொடர்ந்து விசாரணை ஆரம்பமாயிற்று.
அரசாங்க வக்கீல் குறுக்கு விசாரணையை ஆரம்பித்தார்.
“அடிப்படையில் உங்களுக்குள் என்ன பிரச்சினை?”
“அடுப்படியில பிரச்சினை எதுவும் இல்லைங்க”
“ப்ச்.. உங்களுக்கிடையில் என்ன தகராறு?”
“எங்க கடையில தகராறு எதுவுமில்லையே, நல்லாத்தானே ஓடுது?”
“அடாடா… உங்க தாம்பத்ய உறவில் என்ன சங்கடம் என்று அறிய கோர்ட் விரும்புகிறது”
“தாம்பரத்தில எங்களுக்கு உறவுக்காரங்க யாருமில்லைங்க. இருந்தாத்தானே சங்கடம்”
“கருத்து வேறுபாடு ஏதாவது உண்டா?”
“அவரு கருப்புதாங்க. நானும் கறுப்புதான… அதனால வேறுபாடு ஏதும் இல்லைங்க”
“வீட்டுக்காரரோட என்ன சண்டை?”
“வீட்டுக்காரரோட எதுக்குங்க சண்டை, மாசம் ஒண்ணாம் தேதி வாடகையை வாங்கிட்டு அவரு பாட்டுக்கப் போயிடறாரு”
இதற்கு மேல் அவரால் தாங்க முடியவில்லை.
“எதுக்காக விவாகரத்து கேட்கிறார்” என்று அலறி விட்டு இருமினார்.
“ஓ..அதுவா… என்னோட பேசறப்ப எல்லாம் ரத்தக் கொதிப்பு வந்துடுதாம். நீங்க நல்லாத்தான பேசிகிட்டு இருக்கீங்க… உங்களுக்கென்ன ரத்தக் கொதிப்பா வந்திரிச்சு? இது அபாண்டம்தானே.
 ----------------------------

காதலுக்கும் நட்புக்கும் என்ன வித்தியாசம் ?

காதல் என்பது சிக்ஸ்பேக் மாதிரி…!
ஒழுங்கா மெயின்டெய்ன் பண்ணலைன்னா போயிடும்…

நட்பு என்பது தொப்பை மாதிரி…
ஒரு தடவை வந்துச்சுன்னா, போகவே போகாது..!

_____________

ஒருவன் பழைய கட்டிடத்தினூடே சென்று கொண்டிருந்தான்..
அப்போது " அப்படியே நில்.. அசையாதே.." என்று ஒரு சத்தம். ஆனால் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.. என்றாலும் அசையாமல் நிற்க, அவன் போகவிருந்த வழியில் ஒரு சுவர் இடிந்து விழுந்தது. இவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்..

மற்றொரு நாள்.. பேருந்தில் ஏறப் போனபோது மீண்டும் அதே குரல்.. " இந்த பேருந்து வேண்டாம்..". அவனும் அதைத் தவிர்த்து அடுத்த பேருந்தில் செல்லும்போது இவன் சென்றிருக்கவேண்டிய பேருந்து கவிழ்ந்திருப்பதைப் பார்த்தான்..

மிகவும் ஆச்சரியத்துக்குள்ளானவனாய், "யார் என்னை ஒவ்வொருமுறையும் காப்பாற்றுவது..?" என நினைத்தான்.. அதற்கும் உடனடியாக பதில் வந்தது.." நான் உன் காவல் தெய்வம்".

இவன் அடுத்தபடியாக கேட்டான்.

"ஓ காவல் தெய்வமே... என் கல்யாணத்தப்ப எங்கே போய்த் தொலைஞ்சே..?"

_____________
 
ஒருவர் : சுதந்திரத்துக்காக உன் தாத்தா போராடினாரா?

மற்றவர் : ஆமாம்…ஆனால் ...கடைசிவரை பாட்டி தரவே இல்லை…!

_____________
 
"காலத்துக்கு ஏத்த மாதிரி பட்டி மன்றம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க..!

அப்படியா என்ன தலைப்பு?

ஒரு மனிதனின் துன்பத்துக்குப் பெரிதும் காரணம் மின்சாரத்தின் தட்டுப்பபாடா அல்லது சம்சாரத்தின் கட்டுப்பாடா’ன்னுதான்..!"

____________
 
"அந்த பொண்ணுக்கு காது கேக்காதுனு நினைக்கிறேன் !

உனக்கு எப்படி தெரியும்?

நான் அவகிட்ட ஐ லவ் யூ னு சொன்னேன், ஆனா சம்பந்தமில்லாம, நான் போட்டிருக்கிற செருப்பு புதுசுனு சொல்லிட்டு போறா !!!"

____________
 
"உன் பையன் ஒரு ரூபாய் நாணயத்தை முழுங்கிட்டானு டாக்டர்கிட்ட போனியே என்ன ஆச்சு?"

"அவர் 1000 ரூபாயை முழுங்கிட்டார்."

 ____________

என்னதான் மனுசனுக்கு வீடு, வாசல், காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும்,
ரயிலேறனும்னா,  ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான் ஆகனும். இதுதான் வாழ்க்கை.

____________ 
 
நம்ம சர்தார் நெடுஞ்சாலையில் வேகமா கார் ஓட்டிட்டு போனாரு. போலீஸ்
புடிச்சுருச்சு. போலீஸும் சர்தார் தான்.
எங்கே லைசென்ஸ்..? எடு பார்ப்போம்..
லைசென்ஸா..? அப்படின்னா..?
அட.. சின்னதா நாலு மூலையா இருக்கும்.. உன் படம் கூட இருக்குமே..
ஓ.. அதுவா..? (சர்தார் பர்ஸ் எடுத்து சின்ன முகம் பார்க்கும் கண்ணாடியை
எடுத்து நீட்ட.. )
அட.. நீயும் போலீஸ்தானா..? இது தெரிஞ்சிருந்தா நிறுத்தியிருக்க மாட்டேனே..   முதல்லயே சொல்லப்படாதா..?

____________

கணவன் மனைவி இருவரும் ஜெருசலேம் ஊருக்கு டூர் போனாங்க.. போன இடத்துல மனைவி இறந்துட்டா. அங்க இருந்த சர்ச் பாதர் சொன்னார்...'உங்க மனைவி உடலை இந்தியா கொண்டு போகணும்னா பத்தாயிரம் டாலர் ஆகும்.. இங்கேயே புதைச்சிட வெறும் நூறு டாலர் தான் ஆகும்...' 

கணவன் சொன்னான்.. 'நான் இந்தியாவுக்கே கொண்டு போய்டறேன் சார்..'
பாதர் ஷாக் ஆகிட்டார் 'உங்க மனைவி மேல உங்களுக்கு அவ்ளோ பாசமா...' கணவன் சொன்னான்..'அதெல்லாம் இல்லை சார்.. இங்க புதைச்ச இயேசு கிறிஸ்த்து மூணு நாளுல உயிரோட எழுந்து வந்துட்டார்.. அதான் பயமா இருக்கு சார்..'

______________

செல்போனுக்கும் மனிதனுக்கும் என்ன வித்தியாசம்?
மனிதனுக்கு கால் இல்லன்னா பேலன்ஸ் பண்ண முடியாது.
செல்போனில் பேலன்ஸ் இல்லன்னா கால் பண்ண முடியாது.

______________
 
காலைல எழுந்ததும் உடற்பயிற்சி , அப்புறம் நீச்சல், மாலைல கொஞ்சம் நேரம் யோகா அடுத்து டென்னிஸ்...
இ‌வ்வளவு செ‌‌ஞ்சு‌ம் ஏன் சார் உங்க உடம்பு டிரம் மாதிரி இருக்கு ?
அட, இதெல்லாம் டி.வி.ல வழக்கமா பார்க்கிறேன்னு சொல்ல வந்தேங்க!

______________

மகன்: "அப்பா, எனக்கு பைக் வாங்கி தாங்க "
அப்பா : "கடவுள் நமக்கு எதுக்கு ரென்டு கால் தந்திருக்கிறார்?"
மகன் : "ஒன்னு கியர் போட ஒன்னு பிரேக் பிடிக்க"

_______________

இரண்டு பெண்கள்:

கண்டக்டரை கட்டி கிட்டது தப்பா போச்சு.
கொஞ்ச நேரம் வாசப்படியில நின்னாகூட உள்ள போ...உள்ள போங்கரார்.
இது பரவாயில்ல மெக்கானிக்க கட்டிக்கிட்டது தப்பா போச்சு

ஏன் ?
எப்பவும் கட்டிலுக்கு அடியில படுத்துதான் தூங்குறார்
 

_______________

பாட்டி பேரனிடம் ஒரு விடுகதை போட்டார். “சிங்கம் போல நுழையும், ஆடு போல வெளியே போகும், அது என்ன?"
வினாடி யோசித்த பேரன் : “அப்பா”
 

_______________

“அந்த காலத்தில இளவரசர்களுக்கு 14 வயசிலேயே நாட்டை ஆளும் பொறுப்பு குடுத்திருவாங்க” “ஆனா கல்யாணம் 18 வயசில தான்”
“ஏன் ?”
“நாட்டை ஆளலாம் பெண்ணை ஆளுவது அவ்வளவு சுலபம் இல்ல”
 

________________

அப்பா: எக்ஸாம் ஹால்ல போய் தூங்கிட்டு வந்துருக்கியே வெக்கமா இல்ல ?
மகன்: நீங்கதானே கேள்விக்கு பதில் தெரியலனா முழிச்சிகிட்டு இருக்காதனு சொன்னிங்க.
 

________________

என்னடி சொல்ற? உங்க வீட்டுல மிக்சி, கிரைண்டர், குக்கர், வாஷிங் மிஷின் எல்லாம் ஒரே நேரத்துல ரிப்பேரா போச்சா?
அட! என் வீட்டுக் காரருக்கு உடம்பு சரியில்லன்னு சொல்ல வந்தேன்.
 

________________

மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தை பக்கத்துல போக சொன்னது?
 

________________

"இன்னிக்கி 8 மணிக்கு கடுமையான மழையும் காற்றும் வரும்னு டி . வி யில சொன்னாங்க" .
"நீங்க கேட்டீங்களா" ?
"இல்லை, அவங்களே சொன்னாங்க "
 

________________

ஒரு மருத்துவமனைக்கு, ஹெல்த் மினிஸ்டர், விசிட் பண்ணினார்.
அவருக்கு, ஒரு டாக்டர், மருத்துவமனை முழுவதும் சுற்றிக்காட்டினார். ஒரு அறையைப்பார்த்து, இது என்ன வார்டு? என்று கேட்டார். அதற்கு டாக்டர் '' லேபர் வார்டு'' என்று சொன்னார்.
அதற்கு அந்த மினிஸ்டர் ''ஓ, நான் போன முறை, இந்த துறைக்குத்தான், மினிஸ்டராக இருந்தேன்'' என்றார்.
 

________________

ஹலோ! சார் உங்க கிட்ட பேசணும் நேர்ல வரமுடியுமா...
நீங்க யார் மேடம் பேசறீங்க ?
என் குழந்தைகளோட ஒரு குழந்தையின் அப்பா நீங்க.
அய்யோ! அதிர்ச்சியுடன்,
நீங்க விமலாவா...
இல்லை.
கமலாவா...
இல்லை .
ராதாவா...
இல்லை.
ரேகாவா.
இல்லை சார்.நான் உங்க பையனோட ஸ்கூல் டீச்சர் மல்லிகா .
அடச்சே நான் பயந்தே போயிட்டேன்...
 

________________ 

No comments:

Post a Comment