Wednesday, November 30, 2011

நகைச்சுவை

கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...

ஒரு பொண்ணு போட்டோவுல தேவதை மாதிரி இருந்தாலும்,
நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா

அப்பா அடிச்சா வலிக்கும். அம்மா அடிச்சா வலிக்கும். ஆனால் சைட் அடிச்சா வலிக்காது.


உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படிதெரியும்ன்னு கேள்!

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க? டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.


நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்?

இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே கதாநாயகன் வசனம் பேசறாரே... ஏன்?.
அது லஞ்ச் டயலாக்காம்..!

தொப்பையைப் பார்த்து ஜோசியம் சொல்றாரே... யார் அவர்?
அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!

எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..!
நீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப் போறேன்னு சொன்னீங்க..?

நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை...கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்! உன் பொண்டாட்டியையா..?
இல்ல... சைக்கிளை

என்னதான் ஸ்டன்ட் மாஸ்டர் மகனா இருந்தாலும், வேலைக்கு அப்ளை பண்றப்போ... அப்ளிகேஷன் கூட ரெஸ்யூம் தான் வைக்கணும்; டிஷ்யூமை வைக்க முடியாது!

ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?
தெரியாதே!
அட....இதுகூடப் புரியாம இருக்கியே மக்கு.... ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்

உங்க மாமா டெல்லிக்குப் போனாரே... அங்க என்னவா இருக்கார்?
அங்கேயும் எங்க மாமாவாத்தான் இருக்கார்.

போஸ்ட்மேன் கல் தடுக்கி எப்படி விழுவார் ?
’தபால்’-ன்னு விழுவார் !

இது எப்பூடி…. ?


1) மாடு போல சின்னதா இருக்கும்!
ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?... அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

2) எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

3) தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

4 ) தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

5) டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

6) யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது? கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

7) இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

8) ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?

9) பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்? தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

10) அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

11) பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

12 ) மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்த சொல்றாரு!அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?

13) ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டுபொண்ணு தெரியுமா?


--பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

14) அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்ன ஆச்சு?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடி போய்டாங்க!!15) கொடூர மொக்கை! என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி….

நான் எஸ்கேப்......

"ஆப்பிள்"ன் கதை

அமெரிக்காவில் ஆரேகான் மாநிலத்தில் உள்ள ரீட்ஸ் பல்கலை கழகத்தில் (ரிட்ஸ் College – Portland, Oregon) பெற்றோரின் விருப்பத்திற்காக கல்லூரியில் சேர்ந்த அந்த மாணவனுக்கு படிப்பில் நாட்டமில்லை. எதையும் எளிதில் புரிந்து கொள்ளும் ஆற்றலும், கம்யூட்டர்கள் பற்றிய அபார ஞானமும், நல்ல திட்டமிடும் திறனும் இருந்தாலும், கல்லூரி படிப்பு ஏனோ பிடிக்கவில்லை. வெளியேறி வேலைகள் தேடிக் கொண்டிருந்த அந்த இளைஞனுக்கு தீடிரென எழுந்த எண்ணம் ஆன்மீகத்தின் உலக தலைநகரான இந்தியாவிற்கு போக வேண்டும் என்பது.

அந்த இளைஞனுக்கு வார இறுதி நாட்களில் இலவச உணவு வழங்கி வந்தது ஹரே கிருஷ்ணா கோவில். அங்கு ஒரு நண்பர் குறிப்பிட்டுச் சொன்ன மகத்தான இந்தியபாபாவை சந்தித்து ஆன்மீக வாழக்கைக்கு வழி கேட்டு தீட்சை பெற வேண்டும் என்பது அந்த இளைஞனுக்கு திரும்ப திரும்ப தோன்றிக் கொண்டிருந்தது. தனக்கு பகுதி நேரவேலை தந்த கம்யூட்டர் நிறுவனத்திடம் தன் இந்திய பயணத்திற்கு உதவி செய்யும்படி கேட்கிறான். மறுத்த நிறுவன அதிபர் ஜெர்மனிக்கு போய் ஒருவேலை செய்வதானால் இந்தியா அனுப்புவதாகச் சொல்லுகிறார். அந்த வாய்ப்பை ஏற்று, ஜெர்மனியில் கொடுத்த வேலையை முடித்துவிட்டு, இந்திய பயணத்தில் நாட்டமும் ஆன்மீகத்தில் ஆர்வமும் இருந்த உடன் வந்த அமெரிக்க நண்பருடன் குருவைத் தேடி, தனது 19 வயதில் 1974ம் ஆண்டு இந்தியா வருகிறான். குருவின் ஆஸ்ரமம் எங்கே இருக்கிறது எனறு தெரியாமல் பல இடங்களை சுற்றிப் பார்த்தபின் நைனிடால் அருகே உள்ள நீம்கரோலி பாபாவின் கைநச்சி ஆஸ்ரமத்தை அடைகிறான். அங்கு அவன் அறிந்த, அதிர்ந்த, அதிர்ச்சியான விஷயம் அவன் தேடி வந்த பாபா, சில வருடங்களுக்கு முன் கடவுளுடன் கலந்துவிட்டார் என்ற செய்தி. ஏமாற்றமடைந்தாலும் அந்த சூழ் நிலை பிடித்திருந்ததால் அங்கு சில நாள் பாபாவுடன் வாழ்ந்த துறவிகளுடன் தங்கி பலரிடன் பேசுகிறான். அந்த காலகட்டத்தில் ஆன்மீக தேடல் என்ற பெயரில் ஹிப்பிக்களின் புதிய கலாசாரம் பரவிக் கொண்டிருந்தது. அழுக்கான உடை, சீராக இல்லாத நீண்ட முடி, கிடைப்பதை சாப்பிடுவது, போதைப் பொருட்கள் என்று உலகின் பல இடங்களுக்கு அலைந்து கொண்டிருந்த இவர்களில் பலர் இந்தியாவிற்கு வந்து ஏதாவது ஒரு மடத்தில் சாமியார்களுடன் வாழ்வதும் பின்னர் தீட்சை பெற்று திரும்புவதும் நடந்து கொண்டிருந்தது. பலஇடங்களில் இவர்களை ஏமாற்றி நம் ஆட்கள் பணம் பறிப்பதும் நடந்து கொண்டிருந்தது. தானும் தன் நண்பரும் அப்படிப் பட்டவர்கள் இல்லை என்றும், உண்மையில் பாபாவை தேடி வந்ததையும், ஆன்மிக வாழக்கைக்காக அவரின் ஆசி வேண்டி வந்ததையும் ஆஸ்ரம வாழ்க்கையின் போது நெருக்கமான ஒரு துறவியிடம் பேசுகிறான். தந்தை யாரென்று சொல்லப்படாமல், தாயால் தத்து கொடுக்க பட்டதையும், அன்பாக வளர்த்த அவர்களின் ஆசைக்காக கல்லூரி போனதையும், படிக்க முடியாமல் போனதையும், தனக்கு சாதாரண மனித வாழக்கை பிடிக்காமல்தான் அங்கு வந்திருப்பதையும் சொல்லுகிறான்

பொறுமையாகக் கேட்ட அந்தத் துறவி மறு நாள் தன்னை சந்திக்குமாறு சொல்லி அனுப்புகிறார். மறுநாள் காலையில் “ ஆண்டவனின் சித்தப்படி நீ முடிக்க வேண்டிய பெரிய பணிகள் நிறைய இருக்கின்றன. அவற்றை முடித்தபின் நீ ஆன்மீகத்திற்கு வரலாம். இப்போது உன் நாட்டுக்கு போ” எனறு சொல்லி ஒரு ஆப்பிள் பழத்தை கொடுக்கிறார். அந்த ஆஸ்ரமத்தில் பாபா இருக்கும்போது பார்க்க வருபவர்களுக்கு அவர் தருவது ஆப்பிள்தான். ஏமாற்றமடைந்த அந்த இளைஞன், 1974ல் அமெரிக்கா திரும்புகிறான். அந்த இளைஞன் தான் பின்னாளில் கணினித் துறையில் மாபெரும் சாதனைகள் படைத்த ஸ்டீவ் ஜாப்ஸ் (1955-2011).

தமது முதல் கனவான புதிய வகையிலான கணினியை உருவாக்கியதோடு மட்டுமில்லாமல், இசை, தொலைபேசி, கணினி என்று மூன்று தொழில் நுட்பங்களையும் கையடக்க அளவில் உலகெங்கும் கொண்டு சென்ற ஐபாட், ஐபோன், ஐபேட் ஆகியவற்றையும் வடிவமைத்தது அவர் உருவாக்கி வழி நடத்திய நிறுவனம். அந்த நிறுவனத்தின் பெயர் ஆப்பிள். “இந்தியாவிற்கு ஸ்டீவ் செய்த ஆன்மீகப்பயணம் அவர் ஆப்பிளை துவங்க ஊக்கமளித்த முக்கிய காரணம்” என்கிறார் அவரது வாழக்கை சரிதத்தை அவர் அனுமதியுடன் எழுதிக் கொண்டிருக்கும் டைம்ஸ் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் வால்ட்டர் ஐசக்சன்.

2011 அக்டோபர் 5ம் தேதி, இவர் மரணமடைந்த போது, உலகின் அத்தனை பெரிய தினசரிகளும் முதல் பக்கத்தில் தலைப்பு செய்தியாக இவரது மரணச் செய்தியை வெளியிட்டு, தலையங்கள் எழுதி கெளரவித்திருந்தன. பல நாட்டு தலைவர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செய்தி அனுப்பியிருந்தனர். கைநச்சிமடத்தின் நிர்வாகி ஜோஷியும் அதில் அடக்கம். பாபாவை தேடி ஸ்டீவ் ஜாப்ஸ் இந்தியா வந்த போது மடத்திலிருந்தவர் இவர். 1974ல் இந்தியாவில் இருந்து மொட்டைத் தலையும் காவியுமாக அமெரிக்கா சென்ற ஸ்டீவ் ஜாப்ஸின் அடிமனத்தில் இந்து, பௌத்த மதங்களின் ஆழமான தாக்கம் இருந்தது. இது அவரது பல செயல்களில் தெரிந்தது. உலகின் முதல் பத்து பணக்காரர்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும் இவர் வெளிப்படையாக அறிவித்து அளித்த நன்கொடை ஹரே கிருஷ்ணா இயக்கத்திற்கு மட்டுமே. படித்த புத்தகங்களில் பெரும்பாலானவை இந்து, பௌத்த ஞானம் தொடர்பானவை. கடைசி 7 ஆண்டுகளாக புற்று நோயுடன் போராடி தோற்றவரின் இறுதி நாட்கள் பற்றி வரும் செய்திகள் மனதைத் தொடுகின்றன. குடும்பத்தினருடன் கழித்த அந்த நாட்களில் வீட்டின் பிராத்தனை அறையில் நீண்ட நேரம் செலவிட்டிருக்கிறார்.பொதுவாக அமெரிக்கர்கள் வீட்டில் பிரார்த்தனை அறையிருக்காது. இவரது பிரார்த்தனை அறையில் கிருஷ்ணர் போன்ற இந்து கடவுள்களின் படங்கள் இருப்பதாக சொல்லப் படுகிறது. ஸ்டீவ் ஜாப்ஸின் மரண இரங்கல் செய்தியில், “மாற்றி யோசிப்பதற்கான தைரியத்தையும், அதை செயல்படுத்தும் துணிவையும், உலகை மாற்ற் முடியும் என்ற தன்னம்பிக்கையையும், சாதிக்கும் திறமையையும் ஒருங்கே கொண்ட மிகப் பெரிய அமெரிக்க சாதனையாளர்” என்று அமெரிக்க அதிபர் ஒபாமா குறிப்பிட்டிருக்கிறார். இந்த அமெரிக்கருக்கு, அதை சாதிக்க இந்த இந்திய மண்ணும், இங்கு பிறந்த இந்து, பௌத்த மத தத்துவங்களும் உதவியிருக்கின்றன என்பதில் சந்தேகம் எழ வாய்ப்பில்லை.

Tuesday, November 29, 2011

மேனேஜரிடம் 10 கேள்விகள்..

மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்....
1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுன்னு எதிர்பார்க்கறீங்க... ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது...?

2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலை
ன்னா Dont make it too complicatedன்னு சொல்றீங்க... ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbன்னு சொல்றீங்க..?

3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது
Happy Weekend
ன்னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..?

4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலை
ன்னா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க... அதே எங்களுக்கு வேலை செய்யலைன்னா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைன்னு சொல்றீங்க..?

5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ
உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்
ன்னு உங்களுக்கு தெரிய மாட்டேங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா...

6.. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலை
ன்னா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுன்னு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க...?

7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issue
ன்னு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workன்னு சொல்றீங்க...?

8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்டேறான்னு
சொல்றீங்க...?

9. சாயந்திரம் 5 மணிக்கு
நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க...?

10. காலைல வந்ததுல இருந்து
ICICI Direct, gmail , Geogit,
செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal வொர்க் ன்னு சொல்றீங்க...?

ஏன் சார் ஏன்....

இத்த தான்...

திருக்குறள்ள

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்...

ஆப்பீசுக்கு போனா ஆணி புடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.
இந்த மே
னேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது.. நாங்களும் படிச்சிட்டு தான் வந்திருக்கோம் ........