Wednesday, May 16, 2012

பொதுப் பணத்தை நெருப்பா நினைக்கணும்!


கார் பழுது பட்டதால், டாக்சியில் ஏறி கட்சி அலுவலகத்துக்கு வந்தார் காமராஜர். டாக்சிக்கு பணம் கொடுத்து அனுப்பும்படி உதவியாளரிடம் கூறி விட்டு,தன் அலுவல்களைப் பார்க்க ஆரம்பித்தார். உதவியாளர் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து இரசீது பெற்றுக் கொண்டார்.

அன்றைய வரவு செலவினைச் சரிபார்த்த காமராஜர், டாக்சிக்கு கொடுத்த பணம் அதிகம் என உணர்ந்து உதவியாளரைச் சாடினார்.

"டாக்சி மீட்டர் எவ்வளவு ரூபாய் காட்டியது என்று பார்த்தாயா?" - காமராஜர்.

"டாக்சி டிரைவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன் ஐயா."

"நீ மீட்டரைப் பார்த்து, அதன் படிதானே பணம் தர வேண்டும்? மீட்டரைப் பார்க்காமல், டாக்சி டிரைவர் கேட்ட ரூபாயை நீ கொடுக்கலாமா? இது பொதுப்பணம் இல்லையா? அஞ்சு ரூபாய், பத்து ரூபாய்ன்னு, பொது மக்கள் கிட்ட வசூலிச்ச பணத்தை நாம நெருப்பு மாதிரிக் கையாளணும். சிக்கனமாகச் செலவழிக்கணும். கட்சிப் பணத்தை, காமராஜர் தன் இஷ்டத்துக்குச் செலவு பண்ணி, வீணாக்கிட்டார்னு குற்றச்சாட்டு வரக் கூடாது," எனக் கூறினார்.


இவரைப் போன்ற அரசியல் தலைவர்களை என்றுதான் பார்ப்போமோ?


Saturday, April 28, 2012

IT கம்பெனில்ல என்ன பண்ணுறாங்க?

"ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம் வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க?" – நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

"வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும். அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல இருந்தே செய்யணும். இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய தயாரா இருக்கான்."

"அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்".

"இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல ஏதாவது  கம்பெனி, "நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்கன்னு  கேப்பாங்க.
இவங்கள நாங்க "Client"னு சொல்லுவோம்.

"சரி"
இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க பங்காளிங்க
கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு "Sales Consultants, Pre-Sales Consultants....".

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க. காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்? ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா? அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், "முடியும்"னு பதில் சொல்றது இவங்க வேலை.

"இவங்க எல்லாம் என்னப்பா
படிச்சி இருப்பாங்க"?

"MBA, MSனு பெரிய பெரிய
படிப்பெல்லாம் படிச்சி இருப்பாங்க."

"முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு எதுக்கு MBA படிக்கணும்?" – அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

"சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?"

"அது எப்படி? இந்த மாதிரி
பங்காளிங்க எல்லா கம்பெனிளையும் இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ல முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க. இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு ப்ராஜெக்ட் கிடைக்கும்"

"500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50 நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும் முடிக்க முடியாதே?"

"இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும் தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது. இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம். அத பாத்துட்டு "ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல, எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு" புலம்ப ஆரம்பிப்பான்.

"அப்புறம்?" - அப்பா ஆர்வமானார்.

"இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே "இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்"னு சொல்லுவோம்.

"CR-னா?"

"Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க வேலை பார்த்துட்டோம். இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்"னு சொல்லுவோம். இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்."

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

"இதுக்கு அவன்
ஒத்துப்பானா ?"

"ஒத்துகிட்டு தான் ஆகணும். முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?"

"சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?"

"முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம். இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு. இவரது தான் பெரிய தலை. ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு."

"அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம் தெரியும்னு சொல்லு."

"அதான் கிடையாது. இவருக்கு நாங்க பண்ற
எதுவுமே  தெரியாது."

"அப்போ இவருக்கு என்னதான் வேலை?" – அப்பா குழம்பினார்.

"நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி
தலைய சொறிஞ்சிகிட்டு உக்காந்து இருக்கிறதுதான் இவரு வேலை."

"பாவம்பா"

"ஆனா இவரு ரொம்ப நல்லவரு. எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்."

"எல்லா பிரச்னையும் தீர்த்து
வச்சிடுவாரா?"

"ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு. நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை."

"நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!"

"இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு நிறைய அடி பொடிங்க இருப்பாங்க."

"இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?"

"வேலை செஞ்சா தானே? நான் கடைசியா சொன்னேன் பாருங்க...
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர், வேலைக்கு சேரும் போதே "இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு" சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க."

"அந்த டெஸ்டர்னு
ஏதோ சொன்னியே? அவங்களுக்கு என்னப்பா வேலை?"

"இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம், கால் பட்டா
குத்தம்னு சொல்லுற மாதிரி."

"ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா? புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா. சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு
கொடுத்துடுவீங்களா?"

"அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா, அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை செய்துக்கலாம்னு சொல்லுவாங்க"

"கிளையன்ட் சும்மாவா
விடுவானா? ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?"

"கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்."

"எப்படி?"

"நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை."
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு, இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்".

"சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய கழுவிட்டு வந்துடுவீங்க
அப்படிதானே?"

"அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம தான் இருக்கணும்."

"அப்புறம்?"

"ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க
ஏதோ பயங்கரமான ஒன்ன பண்ணி இருக்குற மாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்."

"அப்புறம்?"

"அவனே பயந்து போய், "எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு"

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க." இதுக்கு பேரு "Maintenance and Support". இந்த வேலை வருஷ கணக்கா போகும். 

"ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வர்றது மாதிரி. தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு" இப்போ தான் கிளைன்டுக்கு புரிய ஆரம்பிக்கும்.

"எனக்கும்
நீங்க என்ன பண்றீங்கன்னு புரிஞ்சிடிச்சி.  போதும் விட்டுடு!"

Monday, March 12, 2012

பொண்ணுங்க சொல்ற பேச்சை கேளுங்க...!!

பொண்ணுங்க சொல்ற பேச்சை கேளுங்க...!!

கல்யாணம் ஆனவங்க - அவங்க Wife சொல்ற பேச்சை கேளுங்க..,

லவ் பண்ற பசங்க - அவங்க லவ்வர்
சொல்ற பேச்சை கேளுங்க..

கல்யாணமும் ஆகல.. லவ்வரும் இல்லையா..? No Problem..!!

எதிர்வீட்டு பொண்ணு., பக்கத்து வீட்டு பொண்ணு.. இப்படி எதாவது ஒரு பொண்ணு இருக்கும்ல.. அவங்க சொல்ற பேச்சை கேளுங்க..

ஏன்னா..
பொண்ணுங்க எது சொன்னாலும்., செஞ்சாலும் அது கரெக்டா இருக்கும்..!!

" கேக்க மாட்டேன்"னு பிடிவாதம் பிடிச்சா.. நஷ்டம் நமக்கு மட்டுமில்ல
இந்த உலகத்துக்கே கூட இருக்கலாம்..

அட நானும் அப்படி பிடிவாதமா இருந்தவன் தான். இந்த SMS வர்ற வரைக்கும்..

என் அறிவுக்கண்ணை திறந்து வெச்ச அந்த SMS இதோ...

கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்க கிளம்பும் போது அவருக்கு கல்யாணம் ஆகியிருந்தா.. அவரோட Wife என்ன சொல்லி இருப்பாங்க..?!!

" எங்கே போறீங்க..? "

" யாரெல்லாம் உங்க கூட வர்றா..? "

" எப்போ வருவீங்க..? "

" எங்கே தங்குவீங்க..? "

" என்ன கண்டுபிடிக்க போறீங்க..? "

" எப்படி கண்டுபிடிப்பீங்க..? "

" உங்களால முடியுமா.? "

" உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை.? "

" நீங்க போயிட்டா.., நான் என்ன பண்ணுவேன்.? "

" என்னை மறந்துட மாட்டீங்கள்ல..? "

" நானும் உங்க கூட வரட்டுமா.? "

கொலம்பஸ் : " ஆணியே புடுங்க வேணாம்..
நான் எங்கேயும் போகல..!! "

இப்ப புரியுதா...? கொலம்பஸ்க்கு ஒரு Wife இருந்திருந்து., அவரும்
Mrs.கொலம்பஸ் சொல்ற பேச்சை கேட்டிருந்தா.. இன்னிக்கு..

1. அமெரிக்கா இப்படி எல்லோரையும் நாட்டாமை பண்ணிட்டு இருக்காது..

2. ஹிரோஷிமா., நாகசாகி அழிஞ்சி போயிருக்காது.

3. Twin Towers இடிஞ்சி இருக்காது..

4. பொருளாதார நெருக்கடி வந்திருக்காது..

இதை எல்லாம் விட முக்கியமா..

5. எனக்கும்., Bill Gates-க்கும் சண்டையோ & Ego Problem-மோ வந்தே வந்திருக்காது..!!

ஹி., ஹி., ஹி..!!

என்ன.., நான் கரெக்டா பேசறனா.?!!

Monday, February 27, 2012

ஆசிரியருக்கு!


ஒரு தந்தை தன் மகனைத் துவக்கப் பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. பள்ளி ஆசிரியருக்கு அவர் எழுதிய கடிதங்களின் சில பகுதிகள்........................

தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும் என் மகனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள் இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக் கொடுங்கள். 


பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக் கொடுங்கள்.

சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள். 


மென்மையானவர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர்களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக் கொடுங்கள். 


குற்றம் குறை கூறுபவர்களை அவன் அலட்சியப்படுத்தட்டும்.


அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 


தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள். 


இதை எழுதிய தந்தை ஆப்ரஹாம் லிங்கன்

Thursday, December 1, 2011

எஸ்.எம்.எஸ். தத்துவங்கள்

வாழ்க்கை என்பது பனைமரம் போன்றது. ஏறினால் நுங்கு; விழுந்தால் சங்கு.

7 பரம்பரைக்கு உட்காந்து சாப்பிட வசதி இருந்தாலும், பாஸ்ட் புட் கடையில நின்னுதான் சாப்பிடனும்.

லைப்ல ஒன்னும் இல்லேன்னா போர் அடிக்கும்; தலையில ஒன்னும் இல்லேன்னா கிளார் அடிக்கும்.

என்னதான் ஒருத்தன் குண்டா இருந்தாலும், அவனை துப்பாக்கிகுள்ள போடமுடியுமா?

திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும், அவரால ஒரு குரல்லதான் பேச முடியும்.

அருகில் இருந்தும் பேச முடியவில்லை; உரிமை இருந்தும் கேட்க முடிய வில்லை. (எக்சாம் ஹாலில்) - என்ன கொடுமை சார் இது?

பயம்தான் தோல்விக்கு முக்கிய காரணம். அதனால தயவு செய்து கண்ணாடிய பாக்காதீங்க.

நம்ம அடிச்சா அது மொட்டை; அதுவா விழுந்தா அது சொட்டை.

க்ரீம் பிஸ்கட்டுல க்ரீம் இருக்கும்; நாய் பிஸ்கட்டுல நாய் இருக்குமா?

"dye " னா மண்டையில போடறது; "die" னா மண்டைய போடறது.

தண்ணியில கப்பல் போனா ஜாலி; கப்பல்ல தண்ணி போனா காலி.

காலண்டருல நாம எந்த தேதிய கிழிச்சோம்கிறது முக்கியம் இல்ல. கிழிச்ச தேதியில நாம என்ன கிழிச்சோம்கிறது தான் முக்கியம்.

சவுத் இந்தியாவில நார்த்தங்காய் கிடைக்கும்; ஆனா நார்த் இந்தியாவில சௌத்தங்காய் கிடைக்குமா?

என்னதான் கருணாநிதி DMK வுல இருந்தாலும், அவர் வீட்டு மாடு 'அம்மா' ன்னு தான் கத்தும்.

எலிபென்ட் மேல நம்ம உட்காந்தா அது சவாரி; எலிபென்ட் நம்ம மேல உட்காந்தா ஒப்பாரி தான்!

கீ ரோஸ்ட்ல கீ இருக்கும், ஆனா பேப்பர் ரோஸ்ட்டுல பேப்பர் இருக்குமா?

கோவில் மணிய நம்ம அடிச்சா சத்தம் வரும்; கோவில் மணி ல்ல நம்ம அடிச்சா ரத்தம் வரும்.

மாடு முன்னாடி போனால் முட்டும்.
பிகர் பின்னாடி போனால் திட்டும்.
ஆனா ரெண்டயுமே மேய்க்கிறது கஷ்டம்.

அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் போது நீங்க அடிமை..
அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....

Wednesday, November 30, 2011

நகைச்சுவை

கண்ணா நீ கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,
கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,
பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,
நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...

ஒரு பொண்ணு போட்டோவுல தேவதை மாதிரி இருந்தாலும்,
நெகடிவ்ல பிசாசு மாதிரிதான் இருப்பா

அப்பா அடிச்சா வலிக்கும். அம்மா அடிச்சா வலிக்கும். ஆனால் சைட் அடிச்சா வலிக்காது.


உன்னை யாரவது லூசுன்னு சொன்னா கவலை படாதே! வருத்த படாதே! ஃபீல் பண்ணாதே! உங்களுக்கு எப்படிதெரியும்ன்னு கேள்!

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க? டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.


நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்?

இந்தப் படத்துல அடிக்கடி மதியச் சாப்பாட்டைப் பற்றியே கதாநாயகன் வசனம் பேசறாரே... ஏன்?.
அது லஞ்ச் டயலாக்காம்..!

தொப்பையைப் பார்த்து ஜோசியம் சொல்றாரே... யார் அவர்?
அவர் போலீசுக்கான ஸ்பெஷல் ஜோசியராம்..!

எதுக்கு குப்பைத் தொட்டிய என் முன்னாடி கொண்டு வந்து வைக்கிறே..!
நீங்கதானே மனசுல இருக்கிறத எல்லாம் கொட்டப் போறேன்னு சொன்னீங்க..?

நேத்து எனக்கும் என் பொண்டாட்டிக்கும் பயங்கர சண்டை...கோபத்துல மிதி மிதின்னு மிதிச்சிட்டு வந்தேன்! உன் பொண்டாட்டியையா..?
இல்ல... சைக்கிளை

என்னதான் ஸ்டன்ட் மாஸ்டர் மகனா இருந்தாலும், வேலைக்கு அப்ளை பண்றப்போ... அப்ளிகேஷன் கூட ரெஸ்யூம் தான் வைக்கணும்; டிஷ்யூமை வைக்க முடியாது!

ரயில் வரும்போது ஏன் கேட்டை மூடிடறாங்க தெரியுமா?
தெரியாதே!
அட....இதுகூடப் புரியாம இருக்கியே மக்கு.... ரயில் ஊருக்குள்ள போயிடாம இருக்கத்தான்

உங்க மாமா டெல்லிக்குப் போனாரே... அங்க என்னவா இருக்கார்?
அங்கேயும் எங்க மாமாவாத்தான் இருக்கார்.

போஸ்ட்மேன் கல் தடுக்கி எப்படி விழுவார் ?
’தபால்’-ன்னு விழுவார் !

இது எப்பூடி…. ?


1) மாடு போல சின்னதா இருக்கும்!
ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?... அது கண்ணுக் குட்டி!
கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?

2) எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.

3) தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்.

4 ) தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!

5) டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
சார். மகா, கவி, பாரதி மூணு பேருமே செம பிகர்!

6) யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது? கடிகாரத்தில் பேட்டரியை எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும் உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!

7) இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க! அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

8) ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி போடணும்!
போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே கொள்ளி வச்சுரவா?

9) பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்? தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!

10) அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
சரோஜா! ஏன் கேக்குற?
அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?

11) பல்ப் - எடிசன்
ரேடியோ - மார்கோனி
பை-சைக்கிள் - மேக் மில்லன்
போன் - க்ராஹாம் பெல்
க்ராவிடி - நியூட்டன்
கரண்ட் - பாரடே
எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!

12 ) மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை காட்டி நிறுத்த சொல்றாரு!அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி இருக்கு?

13) ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டுபொண்ணு தெரியுமா?


--பில் கேட்ஸ் ஐ விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.

14) அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்ன ஆச்சு?
மகன்: அத ஏன் கேக்குறப்பா, எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே ஓடி போய்டாங்க!!



15) கொடூர மொக்கை! என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'ல வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி….

நான் எஸ்கேப்......